000 | : | nam a22 7a 4500 |
008 | : | 170508b ii 000 0 tam d |
245 | : | _ _ |a யாளி |
300 | : | _ _ |a பிற வகை |
340 | : | _ _ |a கருங்கல் |
500 | : | _ _ |a கற்பனை விலங்கெனக் கருதப்படும் அதிக ஆற்றல் வாய்ந்த யாளி |
510 | : | _ _ |a
|
520 | : | _ _ |a தமிழகக் கோயில்களில் இடம் பெறும் யாளி எனப்படும் ஒரு வகை விலங்கு அதிக ஆற்றல் வாய்ந்ததாகக் காட்டப்பட்டுள்ளது. யானையை தன் துதிக்கையால் தூக்கிய நிலையிலும், சிம்மத்தை பாய்ந்து தாக்கும் நிலையிலும் யாளிகள் சிற்பங்களில் காட்டப்பட்டுள்ளன. யாளி ஒரு தொன்ம உயிரினமாக இருந்து கால சுழற்சியால் அழிந்து போன விலங்கினத்தைச் சேர்ந்ததாகக் கருதப்படுகிறது. யாளிகள் பொதுவாக சிங்கத்தின் உடலமைப்பையும், பிடரியையும் கொண்டுள்ளன. சிம்ம யாளி, மகர யாளி, யானை யாளி என யாளி மூன்று வகைகளில் சிற்பங்களில் வடிக்கப்பட்டுள்ளன. யாளி வளமைக்கும், ஆற்றலுக்கும், வீரத்திற்குமான குறியீடாக விளங்குகிறது. யாளி நவக்கிரகங்களின் ஒன்றான புதனின் வாகனமாக புராணங்களில் கூறப்பட்டுள்ளது. கற்றளிகள் உருவாகத் தொடங்கிய பல்லவர் காலத்திலிருந்தே தமிழகக் கோயில்களில் யாளிகள் முக்கிய இடம் பெறுகின்றன. கோயில்களில் பெரும்பாலும் யாளிகள் யாளித்தூண்களாகவே அதிக அளவில் காட்டப்பட்டுள்ளன. பழங்காலத்தில் தூண் வழிபாடே சிறப்புற்றிருந்தது. சிவலிங்கமும் தூண் வழிபாட்டில் ஒரு வகை தான் என்று உரைப்போரும் உண்டு. சங்க இலக்கியங்களில் இத்தூண் வழிபாடு கந்து வழிபாடு என அறியப்படுகிறது. எனவே தூண்களைத் தாங்கும் முகமாக, தூண்களாக அமைக்கப்பட்டுள்ள யாளிகள் மேல் ஆய்வுக்குரியவை. |
653 | : | _ _ |a யாளி, யாளி வீரர்கள், யாளி வீரன், தஞ்சை பெருவுடையார் கோயில், பிரகதீஸ்வரர் கோயில், இராஜராஜீச்சுவரம், பெரிய கோயில் சிற்பங்கள், தக்ஷிணமேரு, முதலாம் இராஜராஜன், சோழர் கற்றளி, சோழர் கலைப்பாணி, சோழர் கலைக்கோயில்கள், சோழர் கட்டடக்கலை, இடைக்காலச் சோழர் கோயில், தஞ்சாவூர், சோழநாட்டு சிவத்தலங்கள், சோழர்கள் |
700 | : | _ _ |a காந்திராஜன் க.த. |
752 | : | _ _ |a தஞ்சை பெருவுடையார் கோயில் |b கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |c தஞ்சாவூர் |d தஞ்சாவூர் |f தஞ்சாவூர் |
905 | : | _ _ |a கி.பி.10-ஆம் நூற்றாண்டு/முதலாம் இராஜராஜன் |
914 | : | _ _ |a 10.7831901 |
915 | : | _ _ |a 79.13123578 |
995 | : | _ _ |a TVA_SCL_000384 |
barcode | : | TVA_SCL_000384 |
book category | : | கற்சிற்பங்கள் |
Primary File | : |